Sunday, January 31, 2016

மஹிந்தவிற்கு நெருக்கமானவர்கள் மிரிஹானை வீட்டில் நலம் விசாரிப்பதுடன் ஆறுதலும் தெரிவிப்பு யோஷித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடல்

மஹிந்தவிற்கு நெருக்கமானவர்கள் மிரிஹானை வீட்டில்

நலம் விசாரிப்பதுடன் ஆறுதலும் தெரிவிப்பு

யோஷித தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு அவருக்கு நெருங்கியவர்கள் பலர் தற்போது மிரிஹானையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தது நலம் விசாரித்துள்ளதுடன் ஆறுதலும் கூறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் மிகவும் உறவாக இருந்த பல அரசியல் பிரபலங்கள் மஹிந்த ராஜபக்ஸ வீட்டிற்கு செல்வதை தவிர்த்தாலும் ஒரு சிலர் சென்றுள்ளனர்.
இலங்கையின் நீதித் துறை பலமாக உள்ளதுடன் சிக்கலாக உள்ளதாகவும் கூறியிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ முடியுமான வரை மகனின் விடுதலையை துரிதப் படுத்துவது பிரதானம் எனவும் கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித ராஜபக்ஸ தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு பலர் வருகை தருவதாகவும் அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment