Thursday, February 25, 2016

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஅனைத்து பல்கலைக்கழக மாணவர் உயர் கல்வி இராஜாங்க அமைச்சருடன் பேச்சு வார்த்தை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டஅனைத்து பல்கலைக்கழக மாணவர்
உயர் கல்வி இராஜாங்க அமைச்சருடன் பேச்சு வார்த்தை

பல்கலைக்கழக மாணவர்களுக்கான பிரச்சினைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை குறைவாக அனுமதிப்பதால் இருக்கும் வெற்றிடம் தொடர்பிலும் இதன்போதுகலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கருத்து வெளியிடுகையில்,
இந்த பிரச்சினைகள் முழுவதும் உடனடியாக தீர்க்க முடியாதவையாகும்.
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது.
அத்துடன் மாணவர்கள் தெரிவு செய்யும் பாடங்களை பொருத்தும் அவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதி தீர்மானிக்கப்படும்.

எனவே, கல்வி அமைச்சுடனும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடி இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை பெறலாம் என இதன்போது உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment