Tuesday, February 2, 2016

''கடவுளின் பெயரால் போய்த்தொலை''! தேங்காய் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி திட்டம்!!

''கடவுளின் பெயரால் போய்த்தொலை''!

தேங்காய் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி திட்டம்!!

உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணெய் வடித்து

தேவாலயங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யவும் திட்டம்


கடவுளின் சாபத்தை அரசாங்கத்தின் மீது செலுத்துமாறு கோரும் வகையில் ஒரு லட்சம் தேங்காய்களை தேவாலயத்தில் உடைக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
''கடவுளின் பெயரால் போய்த் தொலை'' எனும் தலைப்பில் இந்த தேங்காய் உடைப்பு சாபம் கொடுக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
தென்னிலங்கையின் புகழ்பெற்ற பௌத்த தேவாலயமான சீனிகம தேவாலயத்தில் இந்த தேங்காய் உடைப்பு நிகழ்வு எதிர்வரும் 6ம் திகதி சனிக்கிழமை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர் இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படும் தேவாலயங்களில் இந்த நிகழ்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உடைக்கப்படும் தேங்காய்களை சேகரித்து எண்ணெய் வடித்து அதனை தேவாலயங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை செய்யவும் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் அதன் தலைவர் தினேஸ் குணவர்த்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment