Friday, February 26, 2016

மஹிந்தவின் பாதுகாவலரின் காணியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேடல்

மஹிந்தவின் பாதுகாவலரின் காணியில்
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேடல்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பிரத்தியேக பாதுகாவலரது காணியில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நெவில் வன்னியாராச்சியின் எனும் இந்த நபரின், மெதமுலன அத்தனயால பிரதேசத்தில் உள்ள பாரிய காணியிலேயே இந்த  அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடிகள், பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் அதிகாரிகள், கண்டறிந்த தகவல்களுக்கு அமைய தேவையான சாட்சியங்கள் சிலவற்றை கண்டுபிடிப்பதற்காக இந்த அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்படும் இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளதாக தெரியவருகிறது

No comments:

Post a Comment