Saturday, March 5, 2016

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் வங்காள, இந்தியா அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்
வங்காள, இந்தியா அணிகள் இன்று மோதல்




ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, வங்காள தேச அணிகள் இன்று மோத உள்ளன.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 24 ஆம் திகதி  வங்காளதேசத்தில் தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (4 வெற்றி), வங்காளதேசம் (3 வெற்றி, ஒரு தோல்வி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பாகிஸ்தான் (2 வெற்றி, 2 தோல்வி), இலங்கை (ஒரு வெற்றி, 3 தோல்வி), ஐக்கிய அரபு அமீரகம் (4 தோல்வி) அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் ஆசிய மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-வங்காளதேசம் இடையிலான இறுதிப்போட்டி மிர்புர் மைதானத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சொந்த மண்ணில் வெற்றிக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக வங்கதேச அணிவீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டி மிர்பூரில்  மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment