Saturday, April 30, 2016

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 23 பேர் பலி

ஈராக்கில் கார் குண்டு தாக்குதல்: 23 பேர் பலி

ராக் தலைநகர் பாக்தாதில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தனர்.
 பாக்தாதில் அமைந்துள்ள காதிமியான் வழிபாட்டுத் தலத்துக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ஷியா பிரிவினரைக் குறி வைத்து அந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், திறந்த வெளிச் சந்தையில் இந்தக் கார் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ராக் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 ஷியாக்களின் 7-ஆவது இமாம் மூஸா அஸ்-காதிமின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவகத்துக்கு ஆயிரக்கணக்கான ஷியா பிரிவினர் நடைபயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தச் சூழலில், இந்தக் கார் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment