Tuesday, April 26, 2016

அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்ட சம்பியன் சுற்றுப்போட்டியில் எவரெஸ்ட் அணி நான்காவது முறையாகவும் சம்பியன்

அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்ட சம்பியன் சுற்றுப்போட்டியில்
எவரெஸ்ட் அணி நான்காவது முறையாகவும் சம்பியன்
(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்ட பூப்பந்தாட்ட சம்பியன் சுற்றுப்போட்டியில் கல்முனை பிரதேச செயலக எவரெஸ்ட் விளையாட்டுக்கழக அணி நான்காவது முறையாகவும் சம்பியனாக தெரிவாகி சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்       வீ. ஈஸ்வரனின் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி கட்டிட விளையாட்டுத் தொகுதியில் 2016.04.24 ஆம் திகதி நடைபெற்ற பூ பந்து (badmintan) விளையாட்டு போட்டியில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, அம்பாறை, நிந்தவூர், கல்முனை (தமிழ் பிரிவு) ஆகிய 07 பிரதேச செயலக அணிகள் பங்கேற்றன.
இதில் இறுதிப் போட்டிக்கு காரைதீவு விளையாட்டு கழகமும் கல்முனை ஏவெரஸ்ட் விளையாட்டுக் கழகமும் தெரிவாகி மோதிக் கொண்டன. இறுதிப் போட்டியில் கல்முனை எவெரஸ்ட் விளையாட்டுக் கழக அணி 3-2 என்ற வீதத்தில் வெற்றியை தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்ட பூ பந்து சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிரதேச செயலக எவரெஸ்ட் விளையாட்டுக்கழக அணியினர்களான எஸ்.ஐ.எம். ஜிஹான்,எம்.எம்.எம். ஜவாஹிர்,  யூ.எல்.இர்சான், ஈ.எம். நௌசார், எம்.யூ.எம். சியாஸ், ஏ.எஸ்.எம்.அஸீம், ரீ.எம். வாஹிஸ் ஆகியோருக்கு கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment