Thursday, July 28, 2016

நேபாளத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து முன்னாள் அமைச்சர் உட்பட 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து
முன்னாள் அமைச்சர் உட்பட 13 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் பஸ் சுமார் 60 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்  என அறிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவரும்  அடங்கியுள்ளார். இவர் அந்நாட்டின் தன்குடா மாவட்ட சிபின் மாவோயிஸ்ட் கட்சி சேர்மன் ஹர்ராஜ் கேவா என்பவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

நேபாளம் நாட்டின் கிழக்கு தான்குடா மாவட்டத்தில் மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த இந்த பஸ் திடீரென சாலையில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது சுமார் 60 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில். பஸ் சுக்கு நூறாக சிதறியது. அந்த பஸ்ஸில் சுமார் 50-க்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்

No comments:

Post a Comment