Friday, July 29, 2016

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை
திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது


அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேனவுக்கு, பொருளாதார அமைச்சின் கீழ் வழங்கப்பட்டிருந்த பிராடோ ஜீப் வண்டி, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தது.
அரசுக்கு சொந்தமான குறித்த வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மீண்டும் அரசு பெறுவதற்கு கடந்த வருடங்களில் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை என்று அரசு குறிப்பிட்டிருந்தது.
எனினும் குறித்த வாகனம் சாரதியுடன் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு இதன் சாரதியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த சாரதி நேற்று முன் தினமே சாரதியாக இணைந்து கொண்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்த பி.எச் பியசேன, கொள்ளுபிட்டி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment