Monday, August 1, 2016

அமெரிக்க பத்திரிகையில் ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் மனைவி மெலனியாவின் ஆபாச படம்

அமெரிக்க பத்திரிகையில் ஜனாதிபதி வேட்பாளர்
டிரம்ப் மனைவி மெலனியாவின் ஆபாச படம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பின் மனைவி, 46, ஆபாச படத்தை வெளியிட்டு, அமெரிக்க பத்திரிகை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல், எதிர்வரும், நவம்பர், 8ல், நடக்க உள்ளது; இதில் குடியரசு கட்சியின் சார்பில், பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70; ஜனநாயகக் கட்சியில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68, போட்டியிடுகின்றனர்.
டிரம்பின் மனைவி மெலனியா, 46, முன்னாள் பிரபல மாடல் அழகி. 2005ல் இருவரும் திருமணம் செய்தனர். ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, 'நியூயார்க் போஸ்ட்' என்ற பத்திரிகை, மெலனியாவின் பழைய, முழு நிர்வாண படத்தை, முதல் பக்கத்தில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'இவரை விட மிகச் சிறந்த முதல் பெண்மணி கிடைக்க மாட்டார்' என்றும், அப்படத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. மெலனியா, மாடல் அழகியாக இருந்தபோது, 1995ல், பிரான்ஸ் நாட்டு பத்திரிகைக்காக எடுக்கப்பட்டது இந்த படங்கள்.இந்த படங்கள் குறித்து, டொனால்டு டிரம்பிடம் கருத்தும் கேட்டு, அதுவும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மெலனியா, பிரபலமான மாடல் அழகியாக இருந்தவர். பிரான்ஸ் பத்திரிகைக்காக இந்த படங்கள் எடுக்கப்பட்டன; இதெல்லாம் மிகவும் சாதாரணம்; நாங்கள் இருவரும் சந்திப்பதற்கு முன் எடுக்கப்பட்ட படங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment