Saturday, August 27, 2016

ஷாருக்கானுக்கு மான் தோலில் ஷு தயாரித்த பாக். ரசிகர் சிறையில் அடைக்கப்பட்டார்

ஷாருக்கானுக்கு மான் தோலில் ஷு தயாரித்த

 பாக். ரசிகர்சிறையில் அடைக்கப்பட்டார்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் இந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர்ஷுபரிசளிக்க முடிவு செய்தார்.

அதற்காகஷுதயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரை சந்தித்து 2 ஜோடிஷுக்கள் தயாரித்து தரும்படி கேட்டார். ஷாருக்கானுக்குஷுஆர்டர் கொடுத்ததை அறிந்த ஜகாங்கீர்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஷாருக்கானின் தீவிர ரசிகர் ஆவார்.

இவர் ஷாருக்கானுக்கு விசேஷமாக மான்தோலில்ஷுதயாரித்தார். இதை அறிந்த பொலிஸார் ஜகாங்கீர் கானின் தொழிற்சாலையை சோதனை நடத்தினர்.

அங்கு மான்தோலில் தயாரிக்கப்பட்டஷுஇருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்புகள் முதலான பொருட்கள் தயாரிப்பது குற்றமாகும்.


இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment