Thursday, September 29, 2016

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும் ஐ.நா சபை அறிவுறுத்தல்


இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும்

ஐ.நா சபை அறிவுறுத்தல்


இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் .நா. சபை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து .நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், நியூயார்க்கில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறோம். இந்தியா, பாகிஸ்தானில் உள்ள .நா. ராணுவ கண்காணிப்புக் குழு, போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.


இரு நாடுகளும் தற்போதைய சூழ்நிலையில் நிதானமாகச் செயல்படுவதுடன், தங்களுக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment