Friday, September 30, 2016

சார்க் மாநாடு ஒத்தி வைப்பு


சார்க் மாநாடு ஒத்தி வைப்பு





இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால் இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் 19 மாநாடு இம் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய பிற சார்க் உறுப்பு நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தன. சார்க்கில் உறுப்பினர்களாக உள்ள 8 நாடுகளில் 5 நாடுகள் புறக்கணிப்பதாக முடிவு எடுத்தன.


இந்நிலையில் சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளதாவது: இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த சார்க் மாநாடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநாடு எப்போது நடத்துவது என்பது குறித்த திகதி பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment