Saturday, October 1, 2016

ஜெயலலிதாவை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்? சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி



ஜெயலலிதாவை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர்?

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி



திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட முதல்வரை ஆளுநர் ஏன் இதுவரை நேரில் சந்தித்து விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் முதல்வருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தமிழக ஆளுநரே நிர்வாக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்று முதல்வர் ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசகர் ராவ் நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.

அப்பல்லோ மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவார். பின்னர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்றையும் ஆளுநர் வித்யாசகர் ராவ் வெளியிடக் கூடும் என தெரிகிறது.
மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.


கடந்த மாதம் 1-ந் திகதி அவர் தமிழக கவர்னர் பொறுப்பை ஏற்றார்.

No comments:

Post a Comment