Thursday, October 27, 2016

விநாயக மூர்த்தி முரளிதரனின் ஜீப் வண்டி நிதி குற்ற விசாரணைப்பிரிவினரால் கைப்பற்றல்


விநாயக மூர்த்தி முரளிதரனின் ஜீப் வண்டி நிதி குற்ற விசாரணைப்பிரிவினரால் கைப்பற்றல்



முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா அம்மான்) சொகுசு ஜீப் வண்டியொன்று நேற்று 27 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலிருந்து வருகை தந்த நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் எனப்படும் ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்;றுள்ளதாக தெரியவருகின்றது.


இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வாகன திருத்துமிடத்தில் திருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment