Tuesday, November 1, 2016

இன்று 51-வது வயதில் காலடி பதிக்கிறார் இந்தி நடிகர் ஷாருக் கான்


இன்று 51-வது வயதில் காலடி பதிக்கிறார்
இந்தி நடிகர் ஷாருக் கான்



இந்தி நடிகர் ஷாருக் கான் இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு கைபேசி மற்றும் டுவிட்டர் மூலம் வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர்.
உலகளாவிய அளவில் அதிக சம்பளம்பெறும் கதாநாயகர்களில் ஒருவராக கருதப்படும் நடிகர் ஷாருக் கான்பவுஜி’, ‘சர்க்கஸ்ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி, பின்னர் 1992-ம் ஆண்டு வெளியானதீவானாபடத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம்பதித்தார்.
பாஸிகர்’, ‘டர்’, ‘அன்ஜான்உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும், மேலும் சில படங்களில் காமெடி, குணச்சித்திர வேடங்களிலும் பிரகாசித்த ஷாருக் கான், ‘தில்வாலே துல்ஹனிய லேஜாயேங்கேபடத்தின் மூலம் உலகப்புகழ் பெற்ற இந்திப்பட கதாநாயகனாக உயர்ந்தார்.
2007-ம் ஆண்டில்கவுன் பனேகா குரோர்பதிநிகழ்ச்சியின் மூலம் ஒவ்வொரு இந்தியர் வீட்டு வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த இவர் .பி.எல். கிரிக்கெட் அணியில் மோதும்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியின் உரிமையாளர்களில் இருவராகவும் உள்ளார்.
மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றதுடன் பிலிம்பேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வாரிக் குவித்துபாலிவுட்டின் பாதுஷாஆக திகழும் ஷாருக் கான் இன்று தனது 51-வது வயதில் காலடி பதிக்கிறார்.


No comments:

Post a Comment