Monday, November 28, 2016

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவில் பொன்னாடை போர்த்தப்பட்ட மூவர்

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவில்

பொன்னாடை போர்த்தப்பட்ட மூவர்


கவிஞர் திலகம் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் எழுதிய 'நான் எனும் நீ' கவிதை நூல் மீள் வெளியீடு நிகழ்வு இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவின் இறுதி நிகழ்வாக) மருதமுனை அல்-மனார் வளாகத்தில் நேற்று முன் தினம் 27ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கவிஞரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் நூலின் வெளியீட்டுரையை கவிஞர் ரவூப் ஹக்கீமும், நூலாய்வினை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வும், “அஷ்ரப் சில நினைவுகள்என்ற தலைப்பிலான உரையை உமா வரதராஜனும், “நான் எனும் நீயும் நீ எனும் நானும்என்ற கவிதையை ஆசுகவி அன்புதீனும் பாடினார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு செய்யித் ஹஸன் மௌலானா மற்றும் மூத்த ஊடகவியலாளர் நிந்தாவூர் ஏ.எல்.எம் சலீம் அவர்களின் 50 வருட ஊடக பணியை பராட்டி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
மருதமுனை மத்திய குழு உறுப்பினர்களாலும், தென் இந்திய மூத்த ஊடகவியலாளர் மனவை அசோகன் அர்களாலும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண அமைச்சர் .எல். நஸீர், மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், கே.எம்.ஏ ரஸ்ஸாக் (ஜவாத்), சிப்லி பாருக், தவம் உட்பட கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து சிறப்பித்தனர்.





No comments:

Post a Comment