Wednesday, November 2, 2016

கிளிநொச்சியில் தீயினால் பாதிப்புக்கு உள்ளாகி கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு அமைச்சரவை அங்கிகாரம்


கிளிநொச்சியில் தீயினால் பாதிப்புக்கு உள்ளாகி

கடைகளை இழந்தோருக்கு நட்டஈடு

அமைச்சரவை அங்கிகாரம்


கிளிநொச்சி நகரத்தில் 2016 செப்டெம்பர் 16ஆம் திகதியன்று ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதியில் ஏற்பட்ட தீ தொடர்பில் மேற் கொள்ளப்பட்ட அனர்த்த மதிப்பீடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில், குறித்த கடைத்தொகுதியில் பாதிப்புக்கு உள்ளான 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகளுக்கு 74 மில்லியன் ரூபா நட்ட ஈட்டுத் தொகையினை பெற்றுக் கொடுப்பதற்கும், நவீன வசதிகளுடன் கூடிய தீயனைக்கும் பிரிவொன்றை 97 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கும், தீயினால் பாதிப்புக்கு உள்ளான கடைத்தொகுதியினை மீள நிர்மாணிப்பதற்கு 150 மில்லியன் மதிப்பீட்டு செலவில் நிலையான பொது சந்தை தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment