Monday, November 28, 2016

மனிதாபிமானமற்ற செயல்களால் எம்மை மன நோயாளி ஆக்காதே. நிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மனிதாபிமானமற்ற செயல்களால்
எம்மை மன நோயாளி ஆக்காதே.

நிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் இன்று 28 ஆம் திகதி திங்கள்கிழமை காலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு பாடசாலைகளில் கடமையாற்றும் கடமை நிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்குமாறு கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 30 வருட காலங்களில் நடைபெற்ற பயங்கரவாத சூழலின் போது பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்களை தரம் பெற்ற அதிபர்கள் இல்லாத நிலையில் அப்பாடசாலைகளில் கடமையாற்றிய சிரேஸ்ட ஆசிரியர்களை கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன் போது அவர்கள் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
கல்வி அமைச்சரே! கடமைநிறைவேற்று அதிபர் விடயத்தில் நீதியுடன் செயற்படுங்கள்.
மனிதாபிமானமற்ற செயல்களால் எம்மை மன நோயாளி ஆக்காதே.
தேவையுள்ள போது அணைப்பதும் தேவை நிறைவேறியதும் நிராகரிப்பதும் சரியா?”
போன்ற குறிப்புகள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 60 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment