Thursday, December 1, 2016

தோட்டா தொழிற்சாலையில் விபத்து: 16 பேர் பலி


தோட்டா தொழிற்சாலையில் விபத்து:
16 பேர் பலி

திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 16 பேர் இறந்திருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை, மீட்க தீயைணப்பு படையினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த முருங்கம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்டா தொழிற்சாலை உள்ளது. இங்கு வெடி பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த ஆலையின் இன்று காலை 60 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் குடோனின் ஒரு பகுதி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கட்டிடத்திற்குள் பலர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.




No comments:

Post a Comment