Sunday, December 4, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோவில் திடீர் பரபரப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருக்கும்
அப்போலோவில் திடீர் பரபரப்பு

தமிழக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் பொலிஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் திகதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்துள்ளது.
குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் பொலிஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள்  வருகின்றன. நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.
மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்.

இந்நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்ரவன் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய, தலைமையிடம் இருந்து உத்தரவும் வந்துள்ளதாம்.

இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.




No comments:

Post a Comment