Friday, December 2, 2016

குமார் குணரட்னம் விடுதலை


குமார் குணரட்னம் விடுதலை

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒருவருட சிறை தண்டனை அனுபவித்ததன் பின்னர் அவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குமார் குணரட்னம் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் நாடு கடத்தப்பட மாட்டார் என அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.
குமார் குணரட்னம் இலங்கை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும் என உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ. நாவின்ன தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment