Sunday, December 4, 2016

என்னை பார்க்க விட மறுக்கின்றனர்': கதறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

என்னை பார்க்க விட மறுக்கின்றனர்':

கதறும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருக்கிறார் என அறிவிக்கப்படுகின்றது.
தீபா கடந்த முறை அப்போலோ சென்ற போதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து தீபா கூறுகையில், " அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். முதல்வரின் அண்ணன் மகள் நான் என பொலிஸ் உயர் அதிகாரியிடம் தெரிவித்தும்  என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

இரத்தபந்தமான என் அத்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்படியாவது அத்தையை பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் காத்துக்கொண்டிருக்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.

அவர் கண்ணீர் விட்டு கதறியப்படி அப்பல்லோ ஆஸ்பத்திரி வளாகத்தில் சுற்றி, சுற்றி வந்தார். அவருடன் அ.தி.மு.க.வினர் கண்ணீர் விட்டு அழுதனர்.




No comments:

Post a Comment