Monday, February 27, 2017

இது எப்படியிருக்கிறது? பெப்ரவரி 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் உத்தியோகத்தரினால் வழங்கப்படும் உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிப்பு!


இது எப்படியிருக்கிறது?

பெப்ரவரி 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு

பொலிஸ் உத்தியோகத்தரினால் வழங்கப்படும்

உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிப்பு!

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சாரதி ஒருவருக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்குப் பதிலாக பொலிஸ் உத்தியோகத்தரினால் வழங்கப்படும் உத்தரவுப் பத்திரத்தில்  திகதி குறிப்பிடப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
கிரான்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் கசுன் என்பவர் பொரளையில் இருந்து முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டிற்கு அபராதம் தாள் வழங்கி பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெப்ரவரி மாதம் 30ஆம் திகதியை குறிப்பிட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் 30 ஆம் திகதி நீதிமன்றம் செல்வது எப்படி? இது கேள்வியாகியுள்ளது.




No comments:

Post a Comment