Thursday, March 30, 2017

லொறி மீது பஸ் மோதி பயங்கர விபத்து! பஸ்ஸில் இருந்த 13 பேர் பலி


லொறி மீது பஸ் மோதி பயங்கர விபத்து!

பஸ்ஸில் இருந்த 13 பேர் பலி

அமெரிக்காவில் தேவாலத்திலிருந்து கிளம்பிய பஸ் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
ஓட்டுனருடன் சேர்ந்து மொத்தம் 15 பேர் பஸ்ஸில் இருந்தனர். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் ஆவார்கள்.
இந்நிலையில், முக்கிய சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது எதிரில் வந்த ஒரு டிரக் லொறி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஓட்டுனர் உட்பட 13 பேர் பலியானார்கள். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






No comments:

Post a Comment