Thursday, March 2, 2017

வங்கலாவாடி பிரதேசத்தில் 23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!


வங்கலாவாடி  பிரதேசத்தில்

23 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்கலாவடி  பிரதேசத்தில் 23 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட   இருவர், சம்மாந்துறைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்கலாவாடி பிரதேசத்திலிருந்து 23 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலினை அடுத்து சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வங்கலாவாடி பிரதேசத்தினைச் சேர்ந்த  50 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.




No comments:

Post a Comment