Wednesday, March 1, 2017

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபரை சொந்த சேவை நிலையத்திற்கு திரும்புமாறு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு பணிப்பு


கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின்

தற்காலிக அதிபரை சொந்த சேவை நிலையத்திற்கு திரும்புமாறு

கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சு பணிப்பு

(அஸ்லம்)



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் தற்காலிக அதிபராக கடமையாற்றும் இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூன்றாம் வகுப்பு உத்தியோகத்தரான பீ.எம்.எம்.பதுர்தீனை உடனடியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமையேற்குமாறு கிழக்கு மாகாணக்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. அசங்க அபேவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணக்கல்வி நிருவாகத்தின் இணக்கப்பாடின்றியும், முறையான விடுவிப்பின்றியும் அத்தேசிய பாடசாலைக்கு தற்காலிக அதிபராக இவர் இசுறுபாய கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சுக்கும், மாகாணக்கல்வி அமைச்சுக்கும் இவரது நியமனம் பலத்த சவாலாக இருந்தது.


கிழக்கு மாகாணத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் 172 பேருக்கு பற்றாக்குறை நிலவுகையில் இவரை மாகாண சபையின் அனுமதியின்றி தேசிய பாடசாலைக்கு தற்காலிக அதிபராக நியமித்தமையானது சட்டவிரோதமானது என தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் முறைப்பாடு செய்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.     

No comments:

Post a Comment