Monday, April 3, 2017

கொழும்பின் பல பகுதிகளில் நாளை தடைப்படும் நீர் விநியோகம்


கொழும்பின் பல பகுதிகளில்

நாளை தடைப்படும் நீர் விநியோகம் 



கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொஸ்கஸ் சந்தி, கிராண்ட்பாஸ், மஹாவத்த, தொட்லங்க, பேஸ்லைன் வீதி, மற்றும் களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொட சந்தி வரையான பிரதான வீதிகளில் உள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 9 மணிமுதல் 18 மணித்தியலாங்களுக்கு நீர் விநியோகம் இவ்வாறு தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment