Monday, April 3, 2017

வேலணை பிரதேச வைத்தியசாலை புதிய வெளிநோயாளர் கட்டடம் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் திறப்பு


வேலணை பிரதேச வைத்தியசாலை

புதிய வெளிநோயாளர் கட்டடம்

அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் திறப்பு



யாழ்.வேலணை பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி நோயாளர் பிரிவு கட்டடம் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, .சரவணபவன், ஸ்ரீதரன், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி .சத்தியலிங்கம், மேலதிக மாவட்ட செயலாளர் சு.தெய்வேந்திரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் துறைசார் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment