Monday, May 1, 2017

லசித் மலிங்க போலவே இருக்கும் இன்னொருவர் மலிங்கவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹேல! வைரலாகும் புகைப்படம்


லசித் மலிங்க போலவே இருக்கும் இன்னொருவர்

மலிங்கவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மஹேல!

வைரலாகும் புகைப்படம்

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படம் குறித்து அதிகம் பேசப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்க போலவே இருக்கும் இன்னொருவரின் புகைப்படத்ததை மஹேல தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் .பி.எல் சுற்றுத்தொடரின் போட்டியொன்று கடந்த சனிக்கிழமை குஜராத்தின் ராஜ்கோட் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பைகுஜராத் அணிகள் மோதின.
போட்டி முடிந்த பின்னர் மும்பை வீரர் லசித் மலிங்க போன்று அச்சு அசல் உருவம் கொண்ட ஒரு நபர் மலிங்கவை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த புகைப்படத்தை மும்பை அணியின் பயிற்சியாளர் மஹேல சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் வெகு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன தனது சகோதரரை மலிங்க கண்டுபிடித்து விட்டார் என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment