Tuesday, May 2, 2017

வாங்காமம் மலையடிக் குளத்தில் மூழ்கி ஏறாவூரைச் சேர்ந்த மாணவன் உயிரிழப்பு


வாங்காமம் மலையடிக் குளத்தில் மூழ்கி

ஏறாவூரைச் சேர்ந்த மாணவன் உயிரிழப்பு



இறக்காமத்தை அண்மித்த வாங்காமம் மலையடிக் குளத்தில் நீராடிய  ஏறாவூரைச் சேர்ந்த செய்னுலாப்தீன் முஸ்தாக் அஹமட் (வயது 16) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே தின விடுமுறையில் நேற்று1 ஆம் திகதி திங்கட்கிழமை தனது நண்பர்களுடன் சுற்றுலாச் சென்ற இச்சிறுவன், குளத்தில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்கு நண்பர்கள் முயற்சித்த போதும்அது கை கூடவில்லை. குளத்தில் நீராடிய இவர்களில் எவருக்கும் முறையாக நீச்சல் தெரிந்திருக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் 11ஆம் ஆண்டில் இம்மாணவன் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment