Tuesday, May 2, 2017

புடவைக்கட்டு பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் நிரந்தர ஆசிரியர்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்


புடவைக்கட்டு பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும்

நிரந்தர ஆசிரியர்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

  
திருகோணமலை குச்சவௌி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று 2 ஆம் திகதி செவ்வாய்கிழமை தங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

253 மாணவரகள் கல்வி பயின்று வரும் வேளை 07 ஆசிரியர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 09 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் பல தடவைகள் கல்வி உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.





No comments:

Post a Comment