Monday, May 1, 2017

மின்சாரத்தை குறைத்து பயன்படுத்துமாறு பொது மக்களுக்கு வலியுறுத்தல்


மின்சாரத்தை குறைத்து  பயன்படுத்துமாறு  

பொது மக்களுக்கு வலியுறுத்தல்


தற்சமயம் நிலவும் வறட்சியினால் நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது.
இது எட்டு தசம் நான்கு சதவீத அதிகரிப்பாகும். நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 31 தசம் நான்கு சதவீதம் வரை குறைவடைந்துள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமா பயன்படுத்துமாறு அமைச்சர்   ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய  பொது மக்களை கேட்டுள்ளார்.
கைத்தொழிற்சாலைகளில் மின்பிறப்பாக்கி இயந்திரங்களை செயற்படுத்துவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகுக்காக 35 ரூபா வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment