Tuesday, May 30, 2017

தெற்கில் பெரு வெள்ளம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரட்சி


தெற்கில் பெரு வெள்ளம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரட்சி


தெற்கில் வெள்ளத்தின் காரணமாக பெரும் எண்ணிக்கையில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரட்சியினால்  மக்கள் அதிளவில் பாதி.க்கப்பட்டள்ளனர்.
வரட்சியின் காரணமாக வடமாகாணத்தில் 1 இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களை சேர்ந்த 4இலட்சத்து 40ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டிடிருப்பதாக இந்த மாவட்டங்களை சேர்ந்த இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இது போன்று கிழக்கு மாகாணத்தில் 44 ஆயிரத்து 635 குடும்பங்களை சேர்ந்த 1இலட்சத்து 62 ஆயிரத்து 771 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டிடிருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா , கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந் சுமார் 670 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டள்ளனர்.

இதேவேளை யாழ்மாவட்டத்தில் 1இலட்சத்து 21 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையம் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி முதல் கடந்த 24ம் திகதி வரையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான   விபரங்கள் பின்வருமாறு.

No comments:

Post a Comment