முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு
எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 3 ஆம்
திகதி ஆர்ப்பாட்டப்
பேரணி ஒன்றை
நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை
துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிராக இந்த
ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்
பத்ம உதயசாந்த
குறிப்பிட்டுள்ளார்.
இந்த
ஆர்ப்பாட்டப் பேரணி எதிர்வரும் 3 ஆம் திகதி
திருகோணமலை நகரில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும்
எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எது
எப்படி இருந்த
போதிலும் இந்தியா
மற்றும் ஜப்பான்
நாடுகளுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி
செய்ய போவதாக
அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அத்துடன்
திருகோணமலை துறைமுகம் தனியார்மயப்படுத்தப்பட
மாட்டாது எனவும்
அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது.
No comments:
Post a Comment