Thursday, June 1, 2017

தோப்பூர் செல்வநகர் பகுதியில் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவைக் கல் நட்டமையினால் பிரதேசத்தில் பரபரப்பு


தோப்பூர் செல்வநகர் பகுதியில்

தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள்

அளவைக் கல் நட்டமையினால் பிரதேசத்தில் பரபரப்பு
  
திருகோணமலை தோப்பூர் செல்வநகர் பகுதியில் முஸ்லிம் மக்கள் 40 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வரும் குடியிருப்பு காணிக்குல் தொல் பொருள் திணைக்கள அதிகாரிகள் இன்று 1 ஆம் திகதி  வியாழக்கிழமை மாலை திடிரென அளவை நடவடிக்கையில் ஈடுபட்டு தொல் பொருள் அளவைக் கல் ஒன்றை நட்டமையினால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு அளவைக் கல் இட்ட போது பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனால் தமக்கு அளவை செய்வது விருப்பமில்லை பொது மக்களிடம் கையொப்பமிட்டு தருமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொது மக்களிடம் வேண்டிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொது மக்கள் கையொப்பமிட்டு கடிதம் வழங்கியதையடுத்து அளவை மேற் கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து சென்றதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குடியிருப்பு காணியில் இடப்பட்ட தொல் பொருள் திணைக்கள அளவைக்கல் பொது மக்களால் பிடுங்கி றியப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.




No comments:

Post a Comment