Friday, June 30, 2017

இன்றுமுதல் புதிய பஸ் கட்டணம்


தனியார் துறையை போன்று இலங்கை போக்குவரத்து துறையிலும் புதிய பஸ்கட்டணம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
புதிய பஸ்கட்டண மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டள்ளதாகவும் போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் தெரிவித்துள்ளன.
தனியார் பஸ்களில் புதிய பஸ் கட்டணம் காட்சிப்படுத்தப்படவேண்டும். பஸ் கட்டணம் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்கு நாடு தழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறும் என்றும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 பஸ்கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை வழங்காமை தொடர்பில் முறைப்பாடுகள் இருக்குமாயின் தொலைபேசியினூடாக அறிவிக்குமாறு போக்குவரத்து பொது முகாமையாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 0115 559 595

No comments:

Post a Comment