Sunday, July 2, 2017

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜெமீலின் ஏற்பாட்டில் பாலமுனை ஒலுவில் மக்களுக்கான இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக, அதன் பிரதித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான .எம்.ஜெமீல் அவர்களின் வறிய மக்களுக்கான 1000 இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக இன்று 02.07.2017 ஞாயிற்றுக்கிழமை பாலமுனை மற்றும் ஒலுவில் மக்களுக்காக 200 மூக்குக் கண்ணாடிகள் வழங்குவதற்கான கண் பரிசோதனைகள் இடம்பெறுகிறது.

தேவையுடைய மக்களுக்கான 1000 இலவச மூக்குக் கண்ணாடிகள் என்னும் திட்டத்திற்கமைவாக ஏற்கனவே முதலாம் இரண்டாம் கட்டமாக சாய்ந்தமருது மாளிகைக்காடு மக்கள் 500 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அஸாம் அப்துல் அஸீஸ்
சாய்ந்தமருது.





No comments:

Post a Comment