Sunday, July 2, 2017

அனுராதபுரம் - திருகோணமலை வீதியில் வாகன ஊர்வலம், மஹிந்தவின் பிரதான கூட்டம் இன்று




கூட்டு எதிர்க் கட்சியின் மாகாண மட்ட அரசாங்க எதிர்ப்புக் கூட்டம் இன்று 3 ஆம் திகதி திருகோணமலை நகரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை எண்ணெய்த் தாங்கி விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதனையும் நோக்காகக் கொண்டு இந்த கூட்டம் திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்துக்கு கலந்துகொள்ள வரும் கூட்டு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நகரம் வரையில் வாகன ஊர்வலமாக வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment