Saturday, August 26, 2017

கல்முனை தமிழர் பிரதேச விவகாரம் உள்ளூர் தமிழர் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கல்முனைத் தமிழர் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் பணிமனையில் நேற்று நடைபெற்ற குறித்த சந்திப்பின் போது கல்முனை தமிழர் பிரதேச விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கே.துரைரெட்ணசிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

இதன்போது, கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பாக குழுவினர் எடுத்துக் கூறிய போது இதுவரை தமக்கு இவ்விவகாரம் தொடர்பில் தெளிவாக சொல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளா.

உடனடியாக பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்த்தனவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் இனியும் தாமதிக்க முடியாது என வலியுறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment