Friday, September 29, 2017

மன்னார் மறிச்சுக்கட்டி உப்பாற்றுப்பகுதியில் மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு


மன்னார் மறிச்சுக்கட்டி உப்பாற்றுப்பகுதியில்

மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து

அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம்

அமைச்சர் ரிஷாட் எடுத்துரைப்பு

மன்னார் மறிச்சுக்கட்டி உப்பாற்றுப்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வந்த மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளினால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எடுத்து கூறியிருப்பதுடன் அந்த தடையை நீக்கி அம்மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவவேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலுவாதார அபிவிருத்தி, புத்த சாசனம் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் அங்கு வருகைதந்த அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி இந்த வேண்டுகோளை விடுத்தார்.


No comments:

Post a Comment