Thursday, September 28, 2017

அகதிகளுக்கு எதிரான இடையூறு மனிதாபிமானத்தை அவமதிக்கும் செயல் மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு


அகதிகளுக்கு எதிரான இடையூறு

மனிதாபிமானத்தை அவமதிக்கும் செயல்

மக்கள் விடுதலை முன்னணி தெரிவிப்பு



ரோஹிங்யா அகதிகளுக்கு இடையூறு செய்வது மனிதாபிமானத்தை அவமதிக்கும் செயல் எனவும், நாடு மற்றும் மக்களின் சமய கூட்டிணைவை அவதூறுக்கு உட்படுத்தும் நடவடிக்கை எனவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
                                                             
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பின் கீழ் இலங்கையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் அகதிகளுக்கு மிகச் சிறிய இனவாத அடிப்படைவாத குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நாட்டில் மீண்டும் சர்வதேசத்தின் தலையீடு ஏற்படக் கூடிய நிலைமை உருவாகும்.


இனவாதம், மதவாதம் என்பன எந்நாட்டிலும் இனம் மற்றும் மொழிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுமாயின் அதன் மூலம் மனிதாபிமானத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும் எனவும் முன்னணியின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment