Friday, September 29, 2017

மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின்

வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக

அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் ஹஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிறுவனத்தின் (UN - HABITAT) உயரதிகாரி அன்வர் கான், கிரபைட் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் அலிகான் ஷரீப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான காமில், சுப்யான், ஜெஸீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.






No comments:

Post a Comment