Tuesday, October 31, 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வர்த்தமானி அறிக்கை நாளை


உள்ளுராட்சி தேர்தலுக்கான

வர்த்தமானி அறிக்கை நாளை



புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு நாளை கைச்சாத்திடப்படவுள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா நாளை காலை 11 மணிக்கு அமைச்சில் இந்த வர்த்தமானிக்கு கையெழுத்திடவுள்ளார்.

 வர்த்தமானி அறிக்கைக்கு கையெழுத்திட்ட பின்னர் உள்ளுராட்சி தேர்தல் நடைபெறும் முறை குறித்து ஊடகங்களுக்கு அமைச்சர் தெளிவுப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.

No comments:

Post a Comment