Monday, October 30, 2017

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை மக்கள் போராட்டம் உக்கிரம் சாலை மறியல் போராட்டமாக மாற்றம்


சாய்ந்தமருதுக்கு தனியான

உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை

மக்கள் போராட்டம் உக்கிரம்

சாலை மறியல் போராட்டமாக மாற்றம்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்ற அந்தஸ்தை வழங்குமாறு கோரி சாய்ந்தமருது பொது மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மேலும் உக்கிரமடைந்துள்ளது. சாலை மறியல் போராட்டமாக இது இன்று இடம்பெறுகின்றது
இளைஞர்கள். வயோதிபர்கள், என ஆண்கள், பெண்கள் எல்லோரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாயலுக்கு முன்பாக பிரதான வீதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதையில் அமர்ந்து அல்லாஹு அக்பர் கோஷமிட்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் இப்போராட்டம் காரணமாக கல்முனைஅம்பாறை, கல்முனைஅக்கரைப்பற்று வழியாக எந்தப் போக்கு வரத்தும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் இப்பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.












No comments:

Post a Comment