Thursday, November 30, 2017

பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கிறது மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி


பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­­டுத்­து­கிறது

 மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி



இலங்­கையில் பல்­வேறு சமூக, கலா­சா­ரங்­­ளைக்­கொண்ட மக்கள் வெவ்­வேறு சம­யங்­களைப் பின்­பற்­று­கின்ற போதிலும் சமா­தா­­மா­கவும் ஐக்­கி­­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். இது சக­வாழ்வு மற்றும் நல்­லி­ணக்­கத்­திற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாக விளங்­கு­­துடன், பன்­மைத்­துவ சூழலில் மகிழ்ச்­சியை வெளிப்­­டுத்­து­­தா­கவும் அமைந்­துள்­ளது என்று  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  விடுத்­துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்
அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ ­தா­வது,
பண்­டைய காலம் முதலே எமது இந்த அழ­கிய தேசம் பல்­வேறு சமய, கலா­சார விழாக்­களின் ஊடாக தமது சக­வாழ்வை வெளிக்­காட்டி வந்­துள்­ளது. அரச அனு­­­ணை­யுடன் நடை­பெறும் இந்த அனைத்து நிகழ்­வு­களும் இலங்கை சமூ­கத்தில் பரஸ்­பர புரிந்­து­ணர்­வையும் நல்­லு­­வையும் உறு­திப்­­டுத்­து­கின்­றன.
மூன்று தசாப்­­கால கொடிய யுத்தம் நிறை­­டைந்­ததைத் தொடர்ந்து, அனைத்து சமூ­கங்­களும் ஒரு தாய் மக்­களைப் போல ஐக்­கி­யத்­து­டனும் சகோ­­ரத்­து­வத்துடனும் முன்­மா­தி­ரி­யான ஒரு தேச­மாக சுபிட்­சத்தை நோக்கிச் செல்­வதே எமது எதிர்­பார்ப்­பாக காணப்­­டு­கின்­றது. உலகின் அனைத்து சம­யங்­களும் போதிக்கும் அன்பு, கருணை மற்றும் சகிப்­புத்­தன்­மையை வெளிப்­­டுத்தும் வகையில் இவ்­­ருட தேசிய மீலாத் விழா யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெ­றுதல் மிகச் சிறப்­பா­­தாகும்.
இந்த நிகழ்வை ஏற்­பாடு செய்­துள்ள தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலு­வல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய, கலா­சார திணைக்­களம் என்பவற்றின் சேவையை பாராட்டுவதுடன், சகல முஸ் லிம் மக்களுக்கும் மீலாதுன் நபி விழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரிய உதவியாளர்கள் ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம் 3- I தரத்தற்கு நியமிக்க நடவடிக்கை 3 –II தரத்திற்கு இவர்களை நியமிக்க முடியாது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்


ஆசிரிய உதவியாளர்கள்

ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம்

3- I தரத்தற்கு நியமிக்க நடவடிக்கை

3 –II தரத்திற்கு இவர்களை நியமிக்க முடியாது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்



ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்க முடியாது என தெரிவித்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆசிரிய பயிற்சி சான்றிதழுள்ளவர்களை மாத்திரம் நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு  மலையகத்திலும் உள்ள பின்தங்கிய பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு இணைக்குமாறு ஜே. வி. பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வி எழுப்பிய அநுரகுமார திசாநாயக்க எம். பி,
2015 ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் பின்தங்கிய பாடசாலைகளுக்காக உயர்தரம் சித்தியடைந்த மூவாயிரம் பேர் அமைச்சினால் நியமிக்கப்பட்டனர். வடக்கு. கிழக்கு மாகாணங்களிலும் தோட்டப்பாடசாலைகளிலும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இவர்களை ஆசிரியர் சேவையின் 3- II பிரிவுக்கு இணைக்க முடியுமான போதும் அவர்களைத் தொடர்ந்து 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கி தொடர்ந்து சேவைபெற்று வருகின்றனர். பின்தங்கிய பாடசாலைகளில் இவர்கள்தான் முழுமையாக கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர் என தெரிவித்த அவர், இவர்களுக்கு சிறிய கொடுப்பனவே வழங்கப்படுவதாகவும் இது முழு ஆசிரியர் சேவைக்கும் அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு கூட வழங்கப்படுவதில்லை. இவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், அகில விராஜ் காரியவசம்,
ஆசிரியர் உதவியாளர்களாக இவர்கள் நியமிக்கப்படுகையில் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. நாம் 2017 முதல் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுத்தோம்.
இவர்கள் ஆசிரியர் சேவை பயிற்சிக்குப் பின்னர் 3- I தரத்தற்கு இணைப்பதாக நியமனம் வழங்கும் போது குறிப்பிடப்பட்டிருந்தது. 3 –II தரத்திற்கு இவர்களை நியமிக்க முடியாது.
31,060 ரூபா சம்பளம் கிடைகக் கூடிய ஆசிரியர் சேவை தரம் 3- I க்கு பயிற்சி பெற்றவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மிலாத் உன் நபி தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி


மிலாத் உன் நபி தினத்தை முன்னிட்டு

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி



நபி பெருமானார் காட்டிய வழி எந்தளவு முக்கியமானது என்பதை தெளிவுபடுததுகின்றது நபி பெருமானாரின் பிறந்த தினம்
நபி பெருமானார் காட்டிய வழி எந்தளவு முக்கியமானது என்பதை தெளிவுபடுத்த நபி பெருமானாரின் பிறந்த தினம் சிறந்த சந்தர்ப்பமாக அமைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 மிலாத் உன் நபி தினத்தை முன்னிட்டு பிதமர் விசேட வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டு;ள்ளார்.

பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு:
  
இஸ்லாமிய சமய நம்பிக்கையின்படி இறைவனால் முஹம்மத் நபியவர்கள் இஸ்லாத்தின் இறுதி நபியாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அவர் சிறந்த சமூகமொன்றை உருவாக்குவதில் தனிச்சிறப்பான பணியை முன்நின்று ஆற்றிய தூதுவர் ஆவார்.
 மிகவும் எளிமையான முறையில், சுகபோகமற்ற, சிறப்பான வாழ்வினை வாழ்ந்து, சமயத்தை நடைமுறைரீதியாக உயிர்ப்பித்த நபியவர்கள், தியாகத்தன்மை, சமத்துவம், சகவாழ்வு, சகோதரத்துவம், பொறுமை, நட்புறவு மற்றும் நெகிழ்வான கொள்கைகள் ஊடாக சிறந்த சமூகமொன்றை உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டினார்.
 நபியவர்கள் சஊதி அரேபியாவின் மதீனா நகரில் சந்ததி சந்ததியாக நிலவி வந்த கோத்திரச் சண்டைகளை சமாதானமாகத் தீர்த்து வைத்து அமைதியான சூழலொன்றை உருவாக்கினார். அவ்வாறு அகிம்சையுடனும் நன்னெறியுடனும் வெற்றி கொண்ட மதீனா நகரம் இன்று உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களின் புனிதஸ்தலமாக மாறியுள்ளமையினை அவர்களது பிறந்த தினத்தில் விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.
 நபியவர்களின் பிறந்த தினம் எமது நாட்டில் நிலையான அமைதி, நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முஹம்மத் நபியவர்கள் காட்டித் தந்த வாழ்க்கை வழிமுறை எந்தளவு முக்கியமானது என்பதைத் தெளிவுபடுத்த சிறந்த சந்தர்ப்பமாகவும் அமையும்.
இலங்கைவாழ் சகோதர முஸ்லிம்கள் உட்பட அனைத்து உலகவாழ் முஸ்லிம்களுக்கும் சிறப்பான மீலாதுன் நபி தினமாக அமையட்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.
 ரணில் விக்கிரமசிங்க

பிரதம அமைச்சர்

301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு 40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி


301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வாய்ப்பு

40 சபைகளின் நிலை இன்னமும் இழுபறி



உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப் பெறப்பட்டதையடுத்து, மேலும் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் எழுந்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் எல்லைய நிர்ணயம் தொடர்பாக கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆறு வாக்காளர்கள் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அந்த வர்த்தமானியை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனால், 93 உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் மனுதாரர்களுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்து, மனுக்களை விலக்கிக் கொள்ள இணங்கினர். நேற்று இந்த மனுக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை அடுத்து, வர்த்தமானி மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏற்கனவே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 சபைகள் உள்ளிட்ட 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனினும்வர்த்தமானியில் ஏற்பட்ட அச்சுப் பிழைகளால் 40 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியாதுள்ளது.

திருத்தப்பட்ட வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னரே இந்த சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு



கிறுக்கப்பட்ட நாணயத் தாள்கள் செல்லுபடியாகாது

இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு


எழுதுகருவிகளினால் கிறுக்கப்பட்ட, வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்ட, மாற்றம் செய்யப்பட்ட, அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்கள், வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் செல்லுபடியாகாது என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இவ்வாறான நாணயத் தாள்கள் டிசெம்பர் 31ஆம் திகதிக்குப் பின்னர் வங்கிகளினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், அவை பெறுமதியற்றவையாகி விடும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாணயத்தாள்களின் மீது எழுதுதல், வரைதல், முத்திரையிடல், வெட்டுதல் அல்லது சேதப்படுத்தல் தண்டனைக்குரிய குற்றம் என்றும் இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

‘ஓக்கி’ புயலின் கோரத் தாண்டவம் கொழும்பு நகரில் பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன


ஓக்கிபுயலின் கோரத் தாண்டவம்

கொழும்பு நகரில் பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன

வங்கக் கடலில் உருவான ஓக்கி (OCKHI) புயல் இலங்கையைக் கடந்து சென்ற போது, வீசிய சூறைக்காற்றினாலும், கொட்டிய மழையினாலும், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓக்கி புயல் தற்போது கொழும்புக்கு மேற்கே  நகர்ந்து 600 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது.
எனினும், அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும், வடக்கு, வடமத்திய, ஊவா, தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அடுத்த சில நாட்களுக்கு கடும் மழை, சூறைக்காற்று குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு, ஓக்கி புயல், காலி தொடக்கம் கொழும்பு வரையான பகுதியைக் கடந்து சென்ற போது கனமழையுடன் சூறைக்காற்று வீசி பெரும் சேதங்களை விளைவித்தது.
கொழும்பு நகரில் பாரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும், விளம்பரப் பலகைகளும் தூக்கி வீசப்பட்டன. மின்சாரம் தடைப்பட்டது. நேற்றும் தொடர்ந்து மழையும், காற்றும் நீடித்தது.
இதனால் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என்றும், குறைந்தது 23 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.1 1மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓக்கி புயலினால் தென், மற்றும் மேல் மாகாணங்களிலும் மலையகப் பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திடீரென நேற்றுமுன்தினம் இரவு புயலாக மாறி அரபிக் கடலை நோக்கி நகர்ந்த போதே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டன.

அமெரிக்க வானிலை முன்னெச்சரிக்கை மையம், இலங்கையை புயல் தாக்கக் கூடும் என்று ஒரு வாரத்துக்கு முன்னரே எச்சரித்திருந்த போதிலும், அதிகாரிகள் அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.