Wednesday, November 29, 2017

கோழிக் கூண்டிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு நிந்தவூரில் நடந்த பரிதாபம்


கோழிக் கூண்டிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு

நிந்தவூரில் நடந்த பரிதாபம்

நிந்தவூர், 09ஆம் பிரிவைச் சேர்ந்த 6ஆம் தர மாணவன் ஒருவர், அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து, நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
மும்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) எனும் மாணவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குறித்த மாணவன், நேற்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு காலை சுமார் 11.30 மணியளவில் வீடுச் சென்று, வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளார் எ உறவினர்கள் தெரிவித்தனர்.
இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டில் பார்த்த போது, அங்கு மாணவனின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் தாயும் தந்தையும் வெவ்வேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் மாணவன், தனது தாயின் அம்மா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார் எ விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment