Sunday, December 3, 2017

கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு 9 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!


கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு

9 வயது சிறுவன் எழுதிய உருக்கமான கடிதம்!

பிரித்தானியாவில் சொந்த வீடில்லாமல் தவிக்கும் 9 வயது சிறுவன் தங்களுக்கு சொந்த வீடு வேண்டும் என்று கூறி அதற்கான காரணத்தையும் கடிதம் ஒன்றில் எழுதியிருப்பதை அவரது தாய் கண்டு வருத்தப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Manchester பகுதியைச் சேர்ந்தவர் Nicola Williams(31), இவருக்கு Louis(9) என்ற மகனும் Emilie(6) மற்றும் Olivia(2) என்ற மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் 9 வயதான Louis கிறிஸ்துமஸ் தினம் வருவதையோட்டி, கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதைக் கண்ட அவரது தாய் மிகவும் வருத்தப்பட்டுள்ளார், அவனுக்கு நான் ஒரு சிறந்த தாயாக இருந்த போதும் அவனுக்கு இது போன்ற எண்ணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில் Louis, இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு தனக்கும், தங்கள் குடும்பத்திற்கும் சொந்த வீடு வேண்டும், எனக்கு பொம்மைகள் எல்லாம் வேண்டாம், நிறைய பழைய பொம்மைகள் இருக்கிறது.

இதனால் அதை எல்லாம் பத்திரமாக வைத்துக் கொள்ள நல்ல அறை வேண்டும், அதற்கு வீடு வேண்டும் நன்றி என கூறி அதில் முடித்துள்ளான்.



இது குறித்து அவரது தாய் கூறுகையில், நாங்கள் வாடகை வீட்டில் தான் தங்கி வருகிறோம்.

தற்போது நாங்கள் Dartford பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறோம். இதுவரை 14 வீடுகள் மாறியுள்ளோம், இதுவே அவனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம், தான் இரண்டு வேலைகள் பார்த்து தான் என் குழந்தைகளை காப்பாற்றி வருகிறென், வீடற்ற நான் எப்படி வீடு கட்ட முடியும்.

தனக்கு சொந்த வீடு என்றும் Dartford கவுன்சிலிடம் தெரிவித்துள்ளேன், அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன், எனக்கு தெரியும் என்னைப் போன்று பலர் இங்கு வீடில்லாமல் தவிக்கின்றனர், இருப்பினும் தனது மகனின் இந்த கடித்தத்தை பார்த்தவுடன் என்ன கூறுவது என்றே தெரியவில்லை என கூறியுள்ளார்.


பிரித்தானியாவில் தற்போது மட்டும் 125,000 குழந்தைகள் வீடற்ற குழந்தைகளாக வசித்து வருவதாகவும், இது குறித்து Dartford கவுன்சிலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.





No comments:

Post a Comment