Saturday, December 2, 2017

நிந்தவூர் வைத்தியசாலையில் புதிய கட்டட தொகுதி நிர்மாண பணிகள் மத்திய பொறியியல் பணியத்திற்கு


நிந்தவூர் வைத்தியசாலையில் புதிய கட்டட தொகுதி

நிர்மாண பணிகள் மத்திய பொறியியல் பணியத்திற்கு

வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான அபிவிருத்தி பணிகளை அரசாங்க நிறுவனங்களிடம் கையளிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதனடிப்படையில் நிந்தவூர் வைத்தியசாலையில் புதிய கட்டட தொகுதி நிர்மாண பணிகளை மத்திய பொறியியல் பணியத்திற்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை வைத்தியசாலையில் விசேட சிறுவர் வோட் தொகுதி, நிர்மாண பணிகளையும் மத்திய பொறியியல் பணியத்திற்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment