Saturday, December 30, 2017

மருதானை புகையிரத தலைமையகத்தில் பாதுகாப்பு ஊழியர் தற்கொலை


மருதானை புகையிரத தலைமையகத்தில்

பாதுகாப்பு ஊழியர் தற்கொலை



மருதானை புகையிரத தலைமையகத்தில் பணி புரிந்து வந்த, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில், மருதானை தொழில்நுட்ப கல்லூரி (டெக்னிகல்) சந்தியிலுள்ள புகையிரத தலைமையகத்தில் கடமையிலிருந்த குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர், பாதுகாப்பு கடமைக்காக தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூலம் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   
உயிரிழந்தவர் 54 வயதான கொவிகொட கமகே குணதிலக எனும், நுகேகொட பிரதேசத்திலுள்ள எம்புல்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது சம்பவ இடத்தில் உள்ளதோடு, மாளிகாகந்தை நீதவான் நீதிபதியினால் மரண பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment